17-09-2025 – பால காண்டம் – ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள் திரு அவதார நாள்.
இறையருள் பொருந்திய சந்தான பாக்கியம் அருள வேண்டும் பக்த கோடிகள்.
உபயம். திரு .Rm. முத்தையா செட்டியார் கோட்டையூர் மற்றும் இறையன்பர்கள்.
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
இன்றைய இராமகாதையில் அருள்மிகு ஸ்ரீ இராமபிரான் மற்றும் அவரது சகோதரர்கள் திருவவதார நிகழ்வு விளக்கப்படுகிறது. தசரத மகாராஜாவின் நீண்ட தவப்பலனாக, அயோத்தியில் பரம்பொருள் விஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ ராமபிரான் பிறந்தார். அவருடன் பரம்பொருளின் அம்ஷங்களாக, லட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகிய சகோதரர்களும் அவதரித்தனர். இவ்வவதாரம் தர்மத்தை நிலைநிறுத்தவும், அசுரர்களின் அதர்மத்தை அழிக்கவும், பக்தர்களை காத்தருளவும் நிகழ்ந்தது. இன்று இந்த புனித அவதாரக் கதையை கேட்பதன் மூலம், பக்தர்களுக்கு தர்மத்தில் நிலைத்து, ஸ்ரீ இராமரின் அருளைப் பெறுவோம்.
ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்
18-09-2025 – குருகுலம், நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்க விண்ணப்பித்துக் கொள்ள சிறந்த நாள்:
கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம், வரைக்காட்சிப் படலம், பூக் கொய் படலம், நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம், உலாவியற் படலம், கோலம் காண் படலம்.
19.09.2025– சீதா இராமர் திருக்கல்யாணம் – கடிமணப் படலம் மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் உபயம். திரு .Rm. முத்தையா செட்டியார் கோட்டையூர். கன்னியருக்கும், காளையருக்கும் விரைவில் திருமணம் நடைபெற அருளை வேண்ட உகந்த நாள்
20-09-25 –பரசுராமப் படலம்
அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம், கைகேயி சூழ்ச்சிப் படலம், ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்-நகர் நீங்கு படலம், தைலம் ஆட்டு படலம், கங்கைப் படலம், குகப் படலம்.
21-09-25 – வனம் புகு படலம், சித்திரகூடப் படலம், பள்ளிபடைப் படலம், ஆறு செல் படலம், கங்கை காண் படலம், திருவடி சூட்டு படலம்-பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்.
ஆரணியகாண்டம் விராதன் வதைப் படலம், சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், அகத்தியப் படலம், சடாயு காண் படலம்,சூர்ப்பணகைப் படலம்.
22-09-25 – கரன் வதைப் படலம். சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், மாரீசன் வதைப் படலம், இராவணன் சூழ்ச்சிப் படலம், சடாயு உயிர் நீத்த படலம், அயோமுகிப் படலம் ,
கவந்தன் படலம் சவரி பிறப்பு நீங்கு படலம்,
கிட்கிந்தாகாண்டம்
பம்பை வாவிப் படலம், அனுமப் படலம்.
23-09-25 – நட்புக் கோட் படலம் , மராமரப் படலம், துந்துபிப் படலம் , கலன் காண் படலம், வாலி வதைப் படலம், தாரை புலம்புறு படலம், அரசியற் படலம், கார்காலப் படலம், கிட்கிந்தைப் படலம், தானை காண் படலம், நாட விட்ட படலம், பிலம் புக்கு நீங்கு படலம், ஆறு செல் படலம், சம்பாதிப் படலம், மயேந்திரப் படலம்.
சுந்தரகாண்டம் ஆரம்பம்
கடல் தாவு படலம்
24-09-25 – காட்சிப் படலம், உருக் காட்டு படலம், சூடாமணிப் படலம்
25-09-25 – சுந்தரகாண்டத்தின் தொடர்ச்சியாக
பொழில் இறுத்த படலம்,கிங்கரர் வதைப்படலம், சம்புமாலி வதைப் படலம் பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் , அக்ககுமாரன் வதைப் படலம், பாசப் படலம், பிணி வீட்டு படலம், இலங்கை எரியூட்டு படலம், திருவடி தொழுத படலம் சுந்தரகாண்டம் நிறைவு .
26-09-25 – யுத்தகாண்டம்
கடல் காண் படலம், இராவணன் மந்திரப் படலம், இரணியன் வதைப் படலம், வீடணன் அடைக்கலப் படலம். ஒன்னார் வலி அறி படலம், கடல் சீறிய படலம், வருணன் அடைக்கலப் படலம், சேது பந்தனப் படலம், ஒற்றுக் கேள்விப் படலம், இலங்கை காண் படலம், இராவணன் வானரத் தானை காண் படலம்.
27-09-25 – மகுட பங்கப் படலம், அணி வகுப்புப் படலம், அங்கதன் தூதுப் படலம், முதற் போர் புரி படலம், கும்பகருணன் வதைப் படலம்.
28-09-25 – மாயா சனகப் படலம், அதிகாயன் வதைப் படலம்,
*நாகபாசப் படலம். (இன்று கருடாழ்வார் நாக பாசனத்தை விடுவிக்க வந்தார்)*
படைத் தலைவர் வதைப் படலம் மகரக்கண்ணன் வதைப் படலம்
அருள்மிகு கருடாழ்வார் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
29-09-25 – பிரமாத்திரப் படலம், சீதை களம் காண் படலம்,
*மருத்துமலைப் படலம் ((மருத்துமலைப் படலம் இன்று ஸ்ரீ இராம தூதர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை கொண்டு வந்து இளையவரான லட்சுமணனை பிரம்மாஸ்திர கட்டில்ருந்து விடுவிக்கப்பட்டார் )*
களியாட்டுப் படலம், மாயா சீதைப் படலம், நிகும்பலை யாகப் படலம்
30-09-25 – நிகும்பலை யாகப் படலம், இந்திரசித்து வதைப் படலம், இராவணன் சோகப் படலம், படைக் காட்சிப் படலம், மூலபல வதைப் படலம், வேல் ஏற்ற படலம், வானரர் களம் காண் படலம், இராவணன் களம் காண் படலம் இராவணன் தேர் ஏறு படலம், இராமன் தேர் ஏறு படலம், இராவணன் வதைப் படலம்.
01-10-25 – மண்டோ தரி புலம்புறு படலம், வீடணன் முடி சூட்டு படலம், பிராட்டி திருவடி தொழுத படலம், மீட்சிப் படலம்.
02-10-25 – மீட்சிப் படலம் தொடர்ச்சியாக
மற்றும் பரதவராஜ் விருந்து, சிரஞ்சீவி ஸ்ரீமத் ஆஞ்சநேயர் பரதழ்வாருக்கு அருள்மிகு ஸ்ரீ இராமபிரான் அயோத்திக்கு திரும்பி வரும் ஆனந்த செய்தியை தெரிவிப்பது.
03-10-25
*திருமுடி சூடிய படலம்
அன்புடையீர்,
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பேரருளால்,நிகழும் விசுவாவசு) ஆண்டு, புரட்டாசி திங்கள் 17ஆம் நாள், வெள்ளிக்கிழமை (03-10-25) எங்களது இல்லத்தில் (இராமாயணம் வீடு – கோட்டையூர்) நடைபெற உள்ள அருள்மிகு இராமபிரானின் 80ஆம் ஆண்டு பட்டாபிஷேகத் (திருமுடித்தரித்தல்) திருவிழா வைபவத்திற்குத் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதுடன், திரு முடி சூடிய அண்ணல் இராமர் கோமகனின் அருள் பெற்று உய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நட்புடன் உங்கள்
ராம. வீரப்ப செட்டியார் குடும்பத்தினர்.
4A வெங்கடாச்சலம் செட்டியார் தெரு,
கோட்டையூர்.
வேணும் அண்ணாமலையார் துணை.
நிகழ்ச்சி நிரல்:
மதியம் (12:00 Noon.) மகேசுவர பூசை
மதியம் (12:15 p.m to 3:00 p.m ) அன்னதானம்
மாலை (6:00p.m ) இறை வணக்கம் – திரு. இராமகிருஷ்ணன்
மாலை (6:05p.m )– கலை நிகழ்ச்சிகள்
மாலை (6:15 p.m ) அறிமுக உரை–திரு Rm.முத்தையா செட்டியார்
இராமாயணப் பட்டாபிஷேக 80-ஆம் ஆண்டு அமுத விழா!
மாபெரும் இராமாயணப் பட்டிமன்றம்
நடுவர்:”தமிழ்க்கடல்”,”வர்ணனைச் சக்கரவர்த்தி”,”உலகத் தமிழ்ப்பறவை” Dr.தேவகோட்டை S.இராமநாதன்BA.BL.D.LITT(USA),
தலைப்பு:
இராமாயணம் படிப்பது இன்புற்று மகிழவா? பின்பற்றிவாழவா?
இன்புற்று மகிழவே?
1.விஜய் டிவி”தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சிப்புகழ் சுழற்கோப்பை வெற்றியாளர்
காரைக்குடி இராகவேந்திரன்.
2.”இசைக்கலையரசி” இந்திரா விஜயலெட்சுமி,மதுரை.
பின்பற்றி வாழவே?
1.”வளரும் வாரியார்” ஆடிட்டர் வ.வெங்கடாசலம்,கீழச்சிவல்பட்டி.
2.”கம்பன் கவிமுகில்”யோகேஷ்குமார்,தேவகோட்டை
இரவு: (8:35 pm )அருள்மிகு
இராமபிரான் திருமுடிசூடல்
இரவு : (9.00p.m ) இரவு விருந்து .
உபயம் : நாட்டரசன் கோட்டை திரு கண. சம்பத் அண்ணன் குடும்பத்தார்கள், ராம. வீரப்ப செட்டியார் குடும்பத்தினர் மற்றும் அனைத்து நலன்களும் வேண்டும் பக்த கோடிகள்.
வேணும் அண்ணாமலையார் துணை
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம ஜெயம்
Dear Devotees,
We cordially invite all with family and friends to the auspicious occasion of 80th year of Thiru.Ramapiran Pattabhishekam to be held with Almighty’s blessings at our residence ( Ramayanam House – Kottaiyur) on Friday the 3rd October 2025 and get the blessings of coronated Lord Ramapiran (ThiruMudusoodiya Ramar Piran) – Upayam Natrasankottai Sampath Kannappan and Family.
Schedule of Programmes
12.00 Noon – Maheswara Poojai
12.15 P.M to 3.00 P.M – Annadhanam
6.00 P.M – Kalai Nigalchigal
6.05 P.M – Irai Vanakam by Ramakrishnan
6.15 P.M– Introductory Speech by RM .Muthiah
6.30. P.M to 8.30 P.M
Maberum Ramayanam Pattimandram
Naduvar: “Tamizh Kadal”, “Varnanai Chakravarthi”, “Ulagath Thamizh Paravai”
Dr. Devakottai S. Ramanathan B.A., B.L., D.Litt (USA),
Thalaippu:
Ramayanam padippathu inputru magilhavaa? Pinpatry vazhavaa?”
inputru magilhavaa?
Vijay TV “Tamizh Pechu Engal Moochu” Nigazhchi Pugazh Suzhal Koppai Vetrialar
Karaikudi Raghavendran.
“Isai Kalaiyarasi” Indira Vijayaletchumi, Madurai.
Pinpatry vazhavaa?
“Valarum Variyar” Auditor V. Venkatasalam, Keelachivalpatti.
“Kamban Kavimugil” Yogesh Kumar, Devakottai.
8.35. P.M – Sri Ramar Pattabhisekham (Arulmigu.Ramar piran ThiruMudi Soodal)
Upayam : Nattarasonkottai Sampath Kannapan and Family, RM.Veerappa Chettiar Family and Devotees
9.00 P.M – Dinner
Soliciting your esteemed presence:
Rm. Veerappa Chettiar and Family
No4 A, Venkatachalam Chettiar Street
Kottaiyur.
Venum Annamalair Thunai. Sri Ramajayam
04-10-25
*விடை கொடுத்த படலம்*
அருள்மிகு ஸ்ரீ சீதாதேவி உடனுறை ஸ்ரீ ராமபிரான் ராமகாதையில் உதவிய அனைவருக்கும் தக்க சன்மானம் கொடுத்து அவர்கள் அவர்கள் இருப்பிடத்திற்கு செல்லுமாறு அன்புடன் விடை கொடுத்த படலம்.
வேணும் அண்ணாமலையார் துணை
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம ஜெயம்
